எப்.முபாரக்-
திருகோணமலை மூதூரில் மூன்று பிள்ளைகளுக்கு 68000 ம் ரூபாய் தாபரிப்பு பணத்தினை செலுத்தாத ஒருவருக்கு ஆறுமாதம் சிறைதண்டனை விதித்து மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் திங்கட்கிழமை (11)உத்தரவிட்டார்.
ஸாபிநகர், மூதூரைச் சேர்ந்த சராப்தீன் கரீஸ் வயது(30) என்பவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருமணம் முடித்து மூன்று பிள்ளைகளுக்கு மாதாந்தம் எட்டாயிரம் ரூபாய் தாபாரிப்பு பணமாக குறித்த சந்தேக நபர் செலுத்தி வந்த நிலையில் எட்டரை மாதங்களாக தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமரைவாக இருந்த நிலையில் மனைவி மூதூர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே குறித்த பணத்தொகையை செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆறு மாதம் சிறைதண்டனை விதித்து நீதிவான் உத்தரவிட்டார்.
