மு.கா. தேசிய மாநாட்டை பாலமுனையில் ஏன் நடத்த முடியாது??

ஆதம் ஐயுப்-

மு.கா. தேசிய மாநாட்டை பாலமுனையில் நடத்வது என்பது இந்த மு.கா. தலைவரின் கணவு மட்மடுமல்ல “பாலமுனையில் பால்நிலா” என்பது மறைந்த மாபெரும் தலைவரின் ஆசையாகும். மறைந்த தலைவரின் ஆசையை தற்போதைய தலைவர் அவர்கள் நனவாக மாற்ற நினைக்கும் இந்த தருணத்தில் பாலமுனை மண்ணில் பற்றில்லாத சில விசமிகள் பாலமுனையில் பேராளர் மாநட்டை நடத்த கூடாது என்ற சில சிறுபிள்ளை தன்மான விடயங்களை குறிப்பிட்டு செய்திகளை வெளியிடுகின்றனர்.

இதற்காக அவர்கள் குறிப்பிடும் காரணங்கள் 

01. பாலமுனை மைதானம் வெயிலால் சூழப்பட்டது.

பாலமுனை மைதானம் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் காணப்படும் அனைத்து மைதானங்களும வெயில் உள்ளவை தான். இவர்கள் குறிப்பிடும் நிந்தவூர் மைதானம் வெயில் சூழ உள்ளவை தான். இதனை விட பரப்பும் குறைந்ததுமாகும்.

02. பக்கத்தில் கடை இல்லை. பள்ளி இல்லை, குடிக்க தண்ணியில்லை.

இக் காரணங்களை குறிப்பிடுபவர்கள் பாலமுனை பொது மக்களாக இருக்க முடியாது. ஏனென்றால் பாலமுனை பெரிய பள்ளியானது 100 மீற்றர் தூரத்திலேயே காணப்படுகிறது. கடை தேடி பேராளர் மாநாடு நடத்துவதில்லை. அவ்வாரயினும் 150மீற்றர் தூரத்தில் பிரதான வீதி உள்ளது. அதில் பல கடைகள். தேவை எனின் எமது ஊரின் நடமாடும் பல கடைகள். குடிநீரை பொருத்தவரை பாலமுனை மக்கள் குடிநீர் கொடுக்க மன்மில்லாதவர்கள் அல்ல. (நடத்த கூடாது என்பவர்களை தவிர) அதற்கு கிழக்கு மாகாண பிரதேச விளையாட்டு வீரர்கள் சாட்சி. மற்கூறிய காரணங்கள் யாவும் பொய்யானதாகும். பாலமுனையில் பேராளர் மாநாட்டை நடாத்த ஏதுவாக ஏனைய காரணங்களாக

பிரதான வீதிக்கு அருகிலுமல்லாமல் தூரமாகவும் இல்லாமல் பொருத்தமான இடத்தில் மைதானம் காணப்படுதாகும். இப் போராளர் மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவரும் போக்குவரத்து வசதி மற்றும் parking வசதியுள்ளது. 

அத்தோடு ஊரின் மத்தியில் அமைந்துள்ளதால் பெண்களும் பேராளர் மாநாட்டை அவதானிக்க முடியும். அத்தோடு முக்கியமாக அம்பாரை மாவட்டத்தில் மத்தியில் பாலமுனை காணப்படுதலாகும். அத்தோடு பேராளர் மாநாட்டை நடத்த சிறந்த கட்சியின் மாவட்ட செயளாலரும், பாலமுனை அமைப்பாளரும், கட்சியின் ஆதரவாளர்களும் உள்ளனர்.

இவ்வாறான காரணங்கள் இருக்கும் போது பாலமுனை கட்சியின் அமைப்பாளரின் சேவை மீதும், அவரின் ஆதரவாளர்களின் எண்ணிக்கை மீதும், அவரின் வளர்ச்சியின் மீதும் காற்புணர்ச்சி கொண்ட சிலர் பாலமுனையில் போராளர் மாநாட்டை நடத்த கூடாது என்பது வெட்க கேடானது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -