எம்.எம்.மத்தீன்-
தனது 14 வயதிலேயே உலகில் பொறியியலுக்கு தலை சிறந்த பல்கலைக்கழகமான MIT ற்கு தன்னுடைய முயற்சியில் உருவாக்கிய ஒற்றை எஞ்சினிலி இயங்கும் விமானத்தை காட்டச்சென்றவர் இவர்.
22 வயதான சப்ரினா பாஸ்தெர்ஸ்கி என்ற பெயருடைய இவர் தன்னுடைய பி.எச்.டி யை ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்கிறார்.
இன்னொரு சுவாரஸ்யம் என்னவெனில் இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஈடுபாடு கிடையாதாம். அத்தோடு இவருக்கு என்று தனியாக ஒரு ஸ்மார்ட் ஃபோன் கூட கிடையாதாம். அதற்காக இவர் ஏழை என்று நினைத்துவிட வேண்டாம். ஏன் தெரியுமா? உலகின் முன்னணி நிறுவனங்களான அமேசான், நாசா, ப்ளூ ஒரிஜின் போன்றவை இவரை கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து தங்களுடைய நிறுவனத்துக்கு உள்வாங்க போட்டி போடுகிறார்களாம்.
ஆனால் இவரோ கருந்துளைகளைப்பற்றி, குவாண்டம் பௌதீகத்தினூடான ஈர்ப்பு விசை பற்றியும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறாராம். அத்தோடு பௌதீகவியலின் சவாலான சிக்கல்களை தீர்க்கும் ஒரு பெண் ஐன்ஸ்டீனாக சமகால விஞ்ஞானிகளால் பார்க்கப்படுகிறாராம். இவருடைய வலைத்தளம்:http://physicsgirl.com/
