சிங்க லே : புதிய தேசிய கொடியுடன் பேரணி - பொலிஸார் வேடிக்கை

சிங்க லே அமைப்பின் முக்கியஸ்தர்கள் நேற்று காலை கொழும்பிலிருந்து கண்டிக்கு வாகனப் பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.

நேற்று காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஒன்று கூடிய சிங்க லே அமைப்பின் முக்கியஸ்தர்கள் முதலில் அங்கு அதிஷ்டான வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதனையடுத்து பொரளை ஊடாக கண்டிக்கான வாகனப் பேரணி புறப்பட்டுச் சென்றது.

சிங்க லே அமைப்பினர் குறித்த வாகனப் பேரணி குறித்து கடந்த சில நாட்களாக பெருமளவில் பிரச்சாரப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் சிங்க லே அமைப்பினர் எதிர்பார்த்த அளவுக்கு பொதுமக்கள் இந்தப் பேரணியில் கலந்து கொள்ளவில்லை.

நேற்று பிற்பகல் கண்டி தலதா மாளிகையை சென்றடைந்த சிங்க லே அமைப்பினர், அங்கு இடம்பெற்ற வழிபாடுகளின் பின்னர் தமது அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றையும் வெளியிட்டுள்ளனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -