வரலாற்றில் பெயர் பதித்த பலர் வாழ்க்கையில் பல படிப்பினை பெற்று முன்னேறியவர்கள் - அமைச்சர் ஹக்கீம்

ஷபீக் ஹுசைன் -
ன்று வெளியான கா.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலை, பெற்றோர் மற்றும் சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ள மாணவ மாணவிகளுக்கும் அவர்களுக்கு கல்வி புகட்டிய ஆசான்கள், அதிபர்கள், பெற்றோர் மற்றும் பாடசாலை சமூகத்தினர் அனைவருக்கும் தனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, நான் கல்வி கற்ற கொழும்பு ரோயல் கல்லூரியில் தசுன் ஜெயசிங்க என்ற மாணவன் கணித பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளதையிட்டு பெருமகிழ்சியடைகிறேன்.


வர்த்தகப் பிரிவில் குறுநாகல் மலியதேவ ஆண்கள் வித்தியாலய மாணவன் அகில் மொஹமட் முதலிடத்தையும் கலைப்பிரிவில் குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலயத்தின் மாணவி ஜீவா நயனமாலி முதலிடத்தையும் விஞ்ஞானப் பிரிவில் கம்பஹா ரத்னாவலி பாலிகா வித்தியாலய மாணவி உமேஷா கருணாவெல்லப முதலிடத்தையும் பெற்றுள்ளார்கள்.

அதேவேளை, முதல் தடவையாக ஒலுவில் அல் ஹம்ரா கல்லூரியில் விஞ்ஞான மற்றும் கணித பிரிவுகளில் பரீட்சைக்கு தோற்றிய 5 மாணவர்கள் மருத்துவ மற்றும் பொறியியல் பீடத்திற்கு தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், இப்பரீட்சையில் சித்தியடையத் தவறிய மாணவ மாணவிகள் தாம் வாழ்க்கையில் தோல்வியடைந்து விட்டோம் என்று சோர்ந்துவிடாமல் தொடர்ந்தும் முயற்சிக்க வேண்டும். வரலாற்றில் பெயர் பதித்த பலர் வாழ்க்கையில் பல தோல்விகளை சந்தித்து அதிலிருந்து படிப்பினை பெற்று முன்னேறியவர்கள் என்பதை மனதில் நிறுத்தி முயற்சிக்க வேண்டும் எனவும் அமைச்சர் ஹக்கீம் தனது வாழ்த்துக் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -