பி.எம்.எம்.எ.காதர்-
கலை, இலக்கியத்தை அபிவிருத்தி செய்து அதன் உடாக தமிழ்,முஸ்லிம் இன நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கோடு இன்று இந்த 'மருதமுனை கலை,இலக்கிய அபிவிருத்தி மன்றம்'அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது என மன்றத்தின் தலைவர் ஏ.அர்.எம்.சாலிஹ் தெரிவித்தார்.
மருதமுனை கலை. இலக்கிய அபிவிருத்தி மன்றத்தின் அங்குரார்ப்பணக்கூட்டம் (01-01-2016) அன்று இரவு மருதமுனை 3ஆம் பிரிவில் நடைபெற்றது. இங்கு தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பின் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றகையில் தெரிவித்ததாவது :-
இன்று சிறு சிறு சம்பவங்களால் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் விரிசல்கள் ஏற்பட்டு அது விஸ்வரூமாகி பல விபரீதங்களை ஏற்படுத்துகின்றது இதை இல்லாதொழிக்க தமிழ், முஸ்லிம் கலை. இலக்கியவாதிகள் ஒன்றுபட வேண்டும்.
கடந்த காலங்களில் புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளை தொடக்கம் புலவர்மணி ஷரிபுத்தீன் நீலாவணன்,சடாட்சரன்,மருதூர் கொத்தன்,மருதூர் வாணன் உள்ளீட்ட பல மூத்த கலை,இலக்கியவாதிகள் மிகவும் ஒற்றுமையுடன் இலக்கியப் பணியாற்றியுள்ளனர்.இவ்வாறான ஒரு யுகத்தை நாங்கள் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.
இன்று கலைஞர்களும்,இலக்கிய வாதிகளும் கவனிப்பாரின்றி காணப்படுகின்றனர். இவ்வாறானவர்களை இனங்கண்டு அவர்களின் கலை இலக்கியப் பணியை ஊக்குவித்து உற்சாகப்படுத்த வேண்டும்.அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் மன்றத்தின் செயலாளராக எம்.ஐ.எம்.முஜீப், பொருளாளராக எஸ்.எல்.எம்.நழீம், பிரதித் தலைவர்களாக பி.எம்.எம்.ஏ.காதர், ஏ.எல.;ஐ.ஹூசைன், உப தலைவராக எம்.ஐ.எம.றபீக்,உப செயலாளராக ஏ.எல்.சபுறுத்தீன், கணக்காய்வாளராக எம்.எஸ்.எம்.சித்தீக் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
கலை இலக்கியத் துறையில் ஆர்வமுள்ளவர்களை இணைத்துக்கொள்வதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.




