கொழும்பு- 10 அல்ஹிதாயா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள அல்ஹிதாயா> அல்ஹிக்மா> தாருஸ் ஸலாம்> அல்ஹம்ஸா> பாத்திமா முஸ்லிம் பெண்கள் கல்லூரி> கொட்டஹேன கனிஷ்ட பாடசாலை> புளுமென்டல் சிங்கள வித்தியாலயம்> பாரன் ஜயதிலக வித்தியாலயம் முதலான எட்டு பாடசாலைகளைச் சேர்ந்த வசதி குறைந்த 150 மாணவ மாணவியருக்கு இலவசமாக பாதணி> புத்தகப் பை மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று மாலை கொழும்பு- 10 அல்ஹிதாயா ம.வி. எம்.ஸி. பஹார்தீன் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது குறித்த மாணவ மாணவியர் பாதணி> புத்தகப் பை மற்றும் கற்றல் உபகரணங்களைப் பெறுவதையும் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களையும் படங்களில் காணலாம்.
ஜெம்ஸித்.






