வீதியில் மாடு குறுக்கறுத்ததில் வயலுக்குள் குடை சாய்ந்தது பட்டா ரக லொறி - ஒலுவிலில் சம்பவம்

லுவில் பிரதான வீதியில் கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த பட்டா ரக லொறி ஒன்று குடைசாய்ந்து சற்று முன் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதியில் மாடு ஒன்று குறுக்கறுத்ததில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வயல் வெளிக்குள் தடம்புரண்டு சென்றதாக அவ்வாகனத்தின் சாரதி தெரிவித்தார்.

வாகனத்தில் பயணித்த சாரதி அவரது உதவியாள் இருவருக்கும் எதுவித பாதிப்பும் இன்றி தெய்வாதீனமாக உயிர் தப்பினர். வாகனத்துக்கும் பாரிய சேதம் எதுவும் இல்லை.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கலீல் எஸ் முஹம்மத்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -