பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய "கிழக்கில் முதலீடு 2016" சர்வதேச மாநாடு..!

முகம்மட் கலீம்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் அவர்கள் தலைமையில் இன்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் "கிழக்கில் முதலீடு 2016" சர்வதேச மாநாடு நிகழ்வுகள் வெகு விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. 

சர்வதேச "கிழக்கில் முதலீடு 2016" நிகழ்வானது தனது 02ஆவது அகவையில் காலடி எடுத்து வைத்துள்ளது. இன்றைய நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். மிக முக்கிய அதிதிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இலங்கை திருநாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றில் இவ்வாறான நிகழ்வுகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும். இன்றைய நிகழ்வு இலங்கையின் வரலாற்றிலே குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் ஒளிமயமான அபிவிருத்திகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வேலைத் திட்டங்களே காரணமாகும் என்பதை சர்வதேசமும் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கியமையானது 

சிறப்பானதாகும். சர்வதேசத்துடன் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பாக இணைந்து செயற்படுவதன் மூலம் கிழக்கு மாகாணமானது அபிவிருத்தி பாதையில் மிக வேகமாக வளர்ச்சியடையும் என்பதை தற்போது அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 

சர்வதேச "கிழக்கில் முதலீடு 2016" நிகழ்வில் சர்வதேச நாடுகளின் முதலீட்டாளர்கள் மிகப்பாரியளவில் கிழக்கில் முதலீடுகள் செய்வதற்கு தயாராகி வருவதாக செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இன்றைய நிகழ்வில் இலங்கையின் பொருளாதார விற்பன்னர்கள், நிதியமைச்சு ஆலோசகர்கள் மற்றும் பல சிறப்புத்தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு கிழக்கில் முதலீடுகள் செய்வதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -