இக்பால் அலி -
தும்மலசூரிய யகம்வெல அஹதிய்யா டவுன் பிரைட் சர்வதேசப் பாடசாலையின் பத்தாண்டு ஆண்டு நிறைவு தின நிகழ்வை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நேற்று முன்தினம் முதல் நாளை 28ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும் வைபவம் நடைபெற்ற போது குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார ஜனாதிபதி சட்டத்தரணியும் ஷப்லி அஸீஸ் பிரைட் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எச் முஹமட் நஷீர் உள்ளிட் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைப்பதையும் விவசாயம், மிருகங்கள், நுண்கலைக் காண்காட்சிகளை மாணவர்கள் இங்கு பார்வையிடுவதையும் காணலாம்.







