ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் - ஆசிரியருக்கு பொலிஸ் விசாரணை

க.கிஷாந்தன்-
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை நகரத்தை அண்மித்த தரம் 01 முதல் 05 வரையான பாடசாலை ஒன்றில் கணித ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவன் ஒருவனை பேனாவால் தலையில் குத்தியதால் மாணவன் காயங்களுடன் தனது பெற்றோர்கள் மூலம் லிந்துலை வைத்தியசாலையில் 26 ஆம் திகதி அன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு சம்பந்தப்பட்ட ஆசிரியர்க்கு எதிராக லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவன் நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தெரிய வருவதாவது, 

சம்பந்தப்பட்ட ஆசிரியர் கணித பாடம் கற்பித்துக்கொண்டு இருக்கும்போது மாணவனுக்கு விளக்கம் தெரியாததால் தன்னுடன் அமர்ந்திருந்த மாணவனிடம் விளக்கம் கேட்டதனால் கோபமுற்ற ஆசிரியர் இவ்வாறு தாக்கியுள்ளதாக லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -