நல்லாட்சி அரசாங்கம் பௌத்த தேர்தகளைக் கட்டுப்படுத்த முயற்சி - மஹிந்த

நல்லாட்சி அரசாங்கம் பௌத்த தேர்தகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே, பௌத்த தேரர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள சட்ட ஒழுங்கு விதிகள் குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (வெள்ளிக்கிழமை) மயூரபதி அம்மன் கோவிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தபோது இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, இந்த புதிய சட்ட ஒழுங்கு விதிமுறையினால் பௌத்த விகாரைகளுடனான மக்களின் தொடர்பு தூரமாவதற்கு வாய்ப்பிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பிக்குகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்று குறிப்பிட்ட மஹிந்த இந்த அரசாங்கம் அவர்களிடமிருந்து அதிகாரங்களைப் பறிப்பதாகவும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -