அக்கரைப்பற்றில் விதவை குடும்பங்களை வலுப்படுத்த உதவி வழங்கும் நிகழ்வு..!

பெண்கள் மட்டும் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரனையோடு பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன் 15 பயனாளிகளுக்கு சுய தொழிலுக்கான வசதிகளை செய்து கொடுக்கும் வைபவம் இன்று (27) அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் டீ.ரொசைறோ வின் நெறியாள்கையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்திப் அவர்களும் கெளரவ அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸான் (நழிமி), கணக்காளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஹீசையின்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் கோழி வளர்ப்பு, சில்லறைக்கடை, நெல்குற்றுதல், துணி வியாபாரம், ஆடைதைத்தல் ஆகிய தொழில்களுக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. 
MF.Farzath.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -