கண்டியில் அமெரிக்க நிலையத்தின் நவீனமயப்படுத்தப்பட்ட அலுவலகத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு..!

னவரி 27 . 2015 கண்டியின் டிஎஸ் சேனநாயக்க ஞாபகார்த்த பொதுநூலகத்தில் புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க நிலயத்தை ஜனவரி 26 செவ்வாய்கிழமை உத்தியோகபூர்வமாக அமெரிக்க தூதரகம் ஆரம்பித்தது. இதில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியும், சர்வசதேச தகவல் திட்டத்திற்கான பணிமனையின் ஓருங்கிணைப்பாளருமான  மக்கொன் பிலிப்ஸ் மற்றும் கண்டி மேயர் சேன திசநாயக்க ஆகிசயார் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

“இது கண்டி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களிற்கு மிகவும் உற்சாகமான தருணம்“ என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் சேஷப் தெரிவித்தார். “இந்த நவீன வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் 

மத்திய மாகாணத்தில் புதிய கண்டுபிடிப்புகளிற்கான ஆய்வுகூடமாக மாறவேண்டும்“ எனவும் அவர் தெரிவித்தார்.

சர்வசதேச தகவல் திட்டத்திற்கான பணிமனையின் (IIP) ஊடாக அமெரிக்க நிலையத்தின் புனரமைப்பு, தொழில்நுட்ப வசதிகள், ஊடாட்ட திட்டங்கள் போன்றவற்றிற்கு 84 மில்லியன் இலங்கை ரூபாய்கள் வழங்கப்பட்டன. 

மேலும் கண்டி மாநகர சபையும், முன்னாள் மேயர் மகிந்திரா ரத்வத்தையும் மேலதிக உதவியை வழங்கினர். 

கண்டி அமெரிக்க நிலையத்தினை புதுப்பிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்காவின் ஸ்மித் சோனியன் நிறுவகம் மற்றும் இலங்கை மத்திய பொறியியல் ஆலாேசனை பணியகம் ஆகியன இணைந்து முன்னெடுத்திருந்தன. 

முன்னரை விட மும்மடங்கு இடவசதியுடன் இங்கு விஜயம் செய்பவர்களுக்காக கணணிகளும் WiFiயும் இலவசமாக உள்ளன. 

அமெரிக்க நிலலயத்தின் செயற்பாடுகள் எவற்றிற்கும் பொதுவாகவே கட்டைங்கள் அறவிடப்படுவதில்லை. இங்கு வார இறுதி நாட்களில் ஆங்கில உரையாடல்கள், தொழில் முனைவு, குறியீடு மற்றும் சமூக ஊடக அறிமுகம், ஓலி ஓளி நாடா தயாரிப்பு போன்றவற்றில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 

வருடம் முழுவதும் இடம்பெறும் இந்த திட்டங்கள் மத்திய மாகாண இளைஞர்களிற்கு தங்களுடைய கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வதற்கான தலமைத்துவ பயிற்சியையும் திறனையும் வழங்குகின்றன. 

“அமெரிக்க நிலையங்கள் ஏனையவர்களை சந்தித்து அவர்களிடமிருந்து கற்பதற்கான நிலலயங்கள்“ என தெரிவித்த பிலிப்ஸ் “தவறு விடுவதற்கும் படைப்பாக்க திறன்மிக்க தீர்வுகளை உருவாக்குவதற்கும் பாதுகாப்பான சூழல் இது“ எனவும் குறிப்பிட்டார். 

“வர்த்தக நடவடிக்கையென்றை ஆரம்பிப்பது, சரியான பல்கலைக்கழகங்களை தெரிவுசெய்வது, வலையத்தளம் ஓன்றை அல்லது யூடியுப் அலைவரிசை ஆரம்பிப்பது அல்லது உங்களைப் போன்ற எண்ணம் கொண்ட செயற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொள்வது என எதுவாகயிருந்தாலும்; உங்கள் திறமையை வெளிக்கொணர்வதற்கும், உங்கள் தனித்துவமான திறனை வளர்த்தெடுப்பதற்கும் நாங்கள் தயார்“ எனவும் அவர் தெரிவித்தார்.

கண்டியில் உள்ள அமெரிக்க நிலையத்திற்கு அப்பால் அமெரிக்க தூதரகம் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் அமெரிக்க நிலையத்தை கொண்டுள்ளது. அமெரிக்க நிலையம் குறித்து மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கு விஜயம் செய்யுங்கள்  http://srilanka.usembassy.gov/american_corners2.html.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -