சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுகின்றனர் - சந்திரிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கட்சியை உருவாக்கவுள்ளமை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபாலவே எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தவிடயத்தை கையாள முன்னர் கட்சியின் தலைவியாக இருந்த போது தமக்கு தெரிந்திருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணொருவ ரணபித ராஜகீய வித்தியாலயத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வை அடுத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே சந்திரிக்கா இந்த பதில்களை வழங்கினார்.

சிங்கள சமூகம் என்று கூறி மலிவான அரசியல் நோக்கங்களை கொண்டு செயற்படும் போது சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுகின்றனர்.

இதன் காரணமாக தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான இனவாதம் தலைதூக்குவதாகவும் சந்திரிக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -