ஊடகவியலாளர் பிரகீத் எக்னளியகோடவின் மனைவியை நீதிமன்றில் அச்சுறுத்திய குற்றச்சாட்டில் எதிர்வரும் பெப்ரவரி ஒன்பதாம் திகதிவரை வெலிகடை சிறைச்சாலைக்குள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர், இன்று மாலை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
நேற்றிரவில் இருந்து அவருக்கு சிறுநீர் கழிப்பது தொடர்பில் சுகயீனம் கானப்பட்டு வந்த காரணத்திலே சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
நேற்றிரவே வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டுமா என சிறைச்சாலை அதிகாரிகள் வினவிய போதும் அதனை மறுத்து வந்த அவர் இன்று மாலை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
