இறக்காமத்தைச்சேர்ந்த கே.இப்றாலெவ்வை அரச விருது விழா-2015 இல் “கலாபூசணம்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சீனடி, சிலம்படி, வாள்வீச்சு முதலிய கலைகளில் சிறு வயது முதல் ஈடுபாடு கொண்ட இவர் இக்கலை மறைந்து போகக் கூடாது என்ற நன்நோக்கோடு இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தும் வருகிறார்.
மாவட்ட, மாகாண, மற்றும் தேசிய ரீதியில் நடைபெற்ற பல போட்டிகளில் பங்குபற்றி பரிசுகள் சான்றிதழ்கள் பெற்ற இவர் 10/ஏ,வாங்காமம் ஜும்ஆ பள்ளிவாசல் நிருபாகசபையில் நீண்ட காலமாக கடமையாற்றிய முன்னாள் தலைவருமாவார்.
ஊர் பற்று மிக்க இவர் குறிப்பிட்ட வாங்காமம் பகுதி வட்ட விதானையாகவும், அகில இலங்கை சமாதான நீதவானாகவும் கடமையாற்றுகிறார் என்பது குறிப்பிட தக்கது. இவரின் பணி தொடர வாழ்த்துவோம்.
தகவல்-ரோஷான் ஏ.ஜிப்ரி-

