பாகிஸ்தான் நாட்டு பிரதமர் கண்டிக்கு விஜயம்..!

க.கிஷாந்தன்-
லங்கைக்கு விசேட விஜயத்தை மேற்கொண்டு வருகைதந்துள்ள பாகிஸ்தான் நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப் 06.01.2016 அன்று கண்டி தலதாமாளிகைக்கு விஜயத்தை மேற்கொண்டார். இவரை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலிம் மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட ஏனையோர் இவர்க்கு செங்கம்பள வரவேற்பு அளித்ததுடன் தலதாமாளிகை தியவடனேநிலமே பிரதிப் நிலங்க தேல பாரம்பரிய ஆடை அணிந்து விசேட வரவேற்பு செய்தார். பின் மலர் பூஜை வழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின் டீ.எஸ்.சேனாநாயக்க வீதியில் அமைந்துள்ள முன்னால் பாகிஸ்தானின் பிரதமர் அலி ஜீன்னா ஞாபகார்த்த மண்டபத்தையும் பார்வையிட சென்றுள்ளார்.

இதன்பின் தேசிய அருங்காட்சி சாலையில் பாகிஸ்தானின் பண்டைய கால பொக்கிஷங்களை பார்வையிட்டதன் பின் பேராதனை தேசிய பூங்காவில் மரநடுகை நிகழ்வு ஒன்றிலும் கலந்து கொண்டு கண்டி விஜயத்திற்கான ஞாபகார்த்த மரநடுகையில் ஈடுப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -