கந்தளாயில் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவனுக்கு பலத்த காயம்..!

எப்.முபாரக்- 
திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் பாடசாலைக்குச் சென்ற சிறுவன் ஒருவனுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இவ்விபத்துச் சம்பவம் இன்று புதன்கிழமை (27) காலையில் இடம்பெற்றுள்ளது. ஆறாம் தரத்தில் கல்விபயிலும் நிப்கி முகம்மட் வயது (12) என்ற சிறுவனே விபத்தில் படுகாயமடைந்தவராவர். குறித்த சிறுவன் வீதியை கடக்க முற்பட்ட வேளையில் எதிரே வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றவர் மோதுண்டதால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மோட்டார் சைக்கிளிலில் சென்றவர் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவிப்பதோடு குறித்த நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -