கல்முனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஹமீட் மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர் - மனாப்

எம்.வை.அமீர்-
ல்முனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளராக திகழ்ந்த ஐ.ஏ. ஹமீட் அவர்களின் இழப்பு நேர்மையான ஒரு அரசியல்வாதியின் இழப்பாகவும் அவர் கல்முனை மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர் என்றும் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் பொதுச்செயலாளரும் கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தின் செயலாளருமான எம்.ஐ.அப்துல் மனாப் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளராகவும் புனர்வாழ்வு அதிகாரசபையின் முன்னாள் தலைவராகவும் இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் திகழ்ந்த ஐ.ஏ. ஹமீட் அவர்கள் அரசியல் மற்றும் பிரதேச இனவேறுபாடு ஏதுமின்றி செயற்பட்டவர் என்றும் தெரிவித்துள்ளார்.

அன்னாரின் பிரிவில் துயருறும் அனைவருக்கும் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதாகவும் அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் கிடைக்க பிராத்திப்பதாகவும் தனது அனுதாபச்செய்தியில் மனாப் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -