எப்.முபாரக்-
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரொருக்கு 7,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 03 மாத காலத்துக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யுமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் ருவான் திஸாநாயக்க திங்கட்கிழமை (25) உத்தரவிட்டார்.
திருகோணமலை கந்தளாய் லைட்வீதியைச் சேர்ந்த குறித்த நபர், ஞாயிற்றுக்கிழமை (24) கந்தளாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த நபரை, கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்த போது மேற்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, 03 மாத காலத்துக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
