தவத்தின் நன்றி மறந்த கருத்து - உல‌மா க‌ட்சி

ந‌ல்லாட்சியில் முஸ்லிம்க‌ளுக்கு எதுவும் கிடைக்க‌வில்லை, மாறாக‌ த‌மிழ் ம‌க்க‌ளுக்கு நிறைய‌ கிடைக்கின்ற‌ன‌ என‌ கிழ‌க்கு மாகாண‌ ச‌பையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பின‌ர் த‌வ‌ம் கூறியிருப்ப‌து ந‌ன்றி மற‌ந்த‌ செய‌ல்ம‌ட்டும‌ல்ல‌ ய‌தார்த்த‌த்துக்கு மாற்ற‌மான‌தாகும் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து. 

ந‌ல்லாட்சி அர‌சாங்க‌த்திட‌ம் முஸ்லிம் காங்கிரஸ் எதிர் பாத்த‌ அனைத்தும் கிடைத்துள்ள‌து. இர‌ண்டு தேசிய‌ல் ப‌ட்டிய‌ல் உறுப்பின‌ர்க‌ள் அமைச்சு ப‌த‌விக‌ள் இன்ன‌பிற‌ சுக‌போக‌ ப‌த‌விக‌ள் என‌ அக்க‌ட்சி கேட்ட‌ அனைத்தும் கிடைத்துள்ள‌ன‌. மு. கா ஒரு போதும் ந‌ல்லாட்சியிட‌ம் முஸ்லிம் ச‌மூக‌த்தின் எந்த‌ ஒரு தேவைய‌யும் முன் வைக்க‌வில்லை. 

அதே நேர‌ம் த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பு அமைச்சு ப‌த‌விக‌ளை கேட்க‌வில்லை. மாறாக‌ த‌ம‌து ச‌மூக‌த்துக்கான‌ தேவைக‌ளையே முன் வைத்த‌ன‌ர். அது அவ‌ர்க‌ளுக்கு கிடைத்து வ‌ருகிற‌து. அவ‌ர‌வ‌ர் எத‌னைக்கேட்ட‌ன‌ரோ அதுவே கிடைத்து வ‌ருகிற‌து.

இந்த‌ நிலையில் ந‌ல்லாட்சியில் முஸ்லிம்க‌ளுக்கு எதுவும் கிடைக்க‌வில்லை என‌ மு. கா உறுப்பின‌ர் கூறுவ‌து இவ‌ர்க‌ள் த‌ம‌து கையாலாகா த‌ன‌த்தை ம‌றைக்க‌ சொல்லும் ஏமாற்று வார்த்தையாகும். 

ஆக‌வே நல்லாட்சியில் அங்க‌ம் வ‌கித்துக்கொண்டு கிழ‌க்கு மாகாண‌ ச‌பையின் ஆட்சியையும் வைத்துக்கொண்டு ஒன்றும் இல்லை என‌ இவ‌ர்க‌ள் கூறுவ‌து ந‌ன்றி ம‌ற‌ந்த‌ செய‌ல் ம‌ட்டும‌ல்ல‌ அப்பாவி முஸ்லிம்க‌ளை தொட‌ர்ந்தும் ஏமாற்றுவ‌தாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -