கல்முனை நகர சபையின் முன்னாள் தலைவர் காலமானாா்..!







அஷ்ரப் ஏ சமத்-

ல்முனை நகர சபையின் முன்னாள் தலைவராக கடமையாற்றிய பொறியியலாளா் ஜ.ஏ ஹமீட் இன்று(3)ஆம் திகதி காலமானாா். இவரது ஜனசா இன்று அசா் தொழுகையை யடுத்து அவரது சொந்த ஊரான மருதமுனையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவா் முன்னாள் அமைச்சா் அதாவுல்லாவின் காலத்தில் தேசிய காங்கிரசில் அங்கம் வகித்தாா். புனா் வாழ்வு அதிகார சபையின் தலைவராகவும், மாகாணசபைகள் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் இருந்த உள்ளுராட்சி ஆளுகை
சபையின் பணிப்பாளராகவும் இறுதியாக கடமையாற்றியவா் என்பதுகுறிபிடத்தக்கது.

அஷ்ரப்பினால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நேர்மையான அரசியல்வாதியே ஹமீட்; முதல்வர் அனுதாபம்!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களினால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நேர்மையான அரசியல்வாதியே பொறியியலாளர் ஐ.ஏ.ஹமீட் அவர்களாவார் என கல்முனை மாநகர முதல்வரும் மு.கா. பிரதிச் செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

முன்னாள் கல்முனைப் பிரதேச சபைத் தவிசாளார் ஐ.ஏ.ஹமீதின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

"கல்முனைப் பிரதேச சபையின் மிக நேர்மையான ஒரு தவிசாளர் என்று எல்லோராலும் புகழப்படுகின்ற அளவுக்கு ஐ.ஏ.ஹமீட் அவர்களின் நிர்வாக செயற்பாடுகள்  அமைந்திருந்ததை நான் நினைவூட்டுகின்றேன்.

1994ஆம் ஆண்டு கல்முனை பிரதேச சபைக்கு நடைபெற்ற முதலாவது உள்ளூராட்சித் தேர்தலின்போது மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களினால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்ட பொறியியலாளர் ஐ.ஏ.ஹமீத், மருதமுனை மக்களை மு.கா.வின் பக்கம் அணி திரளச் செய்ததுடன் அதிகூடிய விருப்பு வாக்குகளையும் பெற்றுக் கொண்டார்.

அவரது நேர்மை, திறமை, ஆளுமையை இனம் கண்டிருந்த மர்ஹூம் அஷ்ரப், அவரை கல்முனைப் பிரதேச சபையின் முதலாவது தவிசாளராக நியமித்து அழகு பார்த்தார். பதவியைப் பொறுப்பேற்ற ஹமீட், தலைவரினதும் மக்களினதும் நம்பிக்கையை வீணடிக்காதவாறு சேவையாற்றி அனைவரினதும் நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டார்.

தலைவரின் மறைவுக்குப் பின்னர் அவர் அரசியலில் நீடித்த போதிலும் அந்த அரசியலில் அவரினால் ஜொலிக்க முடியவில்லை. எல்லா விடயங்களிலும் நேர்மையானை சிந்தனையைக் கொண்டிருந்த அவர் எப்போதும்  கொள்கைப்பற்றுடையவராகத் திகழ்ந்தார்.

அவரது மறைவையிட்டு குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்" என்று முதல்வர் நிஸாம் காரியப்பர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -