ஈரானியர் 'உம்ரா' செய்ய முடியாது - அந்நாட்டு அரசு உத்தரவு

சவூதி அரேபியாவில், அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்ட ஷியா பிரிவுத் தலைவருக்கு கடந்த வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் ஈரானில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களின்போது, தலைநகர் டெஹ்ரானிலுள்ள சவூதி தூதரகத்துக்கு தீ வைக்கப்பட்டது.

அதையடுத்து, ஈரானுடனான தூதரக உறவை சவூதி அரேபியா முறித்துக் கொண்டது.

பதிலுக்கு சவூதி பொருள்களை இறக்குமதி செய்ய ஈரான் தடை விதித்தது. இந்தச் சூழலில், யேமனிலுள்ள ஈரான் தூதரகம் மீது சவூதி அரேபியா விமானத் தாக்குதல் நிகழ்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

"உம்ரா' புனிதப் பயணத்துக்கு ஈரான் தடை

ஈரானுக்கும், சவூதி அரேபியாவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தின் ஒரு பகுதியாக, தங்கள் நாட்டு மக்கள் சவூதி அரேபியாவிலுள்ள மெக்காவுக்கு "உம்ரா' புனிதப் பயணம் மேற்கொள்ள ஈரான் தடை விதித்துள்ளது.

அந்தப் புனிதப் பயணம், ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்படுவதாகும். அந்தப் புனிதப் பயணம் மேற்கொள்ள தங்கள் நாட்டினருக்கு ஈரான் காலவரையின்றித் தடை விதித்துள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -