தெமட்டகொடவில் அண்மையில் கடத்தப்பட்ட நபர், பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவிடம் அழைத்துச் செல்லப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேக நபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில்; தமது தயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.
அதேவேளை கடத்தல் சம்பவத்துடன் ஹிருணிகாவிற்கு தொடர்பு உண்டு என்பது உறுதியானால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படக் கூடுமென அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடத்தல் தொடர்பில் போதியளவு ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் ஹிருணிகாவை கைது செய்யவோ, சட்ட நடவடிக்கை எடுக்கவோ முடியவில்லை என பொலிஸார் முன்னதாக கூறியிருந்தனர்.
எனினும், தற்போது ஹிருணிகாவிடம் கடத்தப்பட்டவர் அழைத்துச் செல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பொலிஸாரே நேற்று நீதிமன்றில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தகது.
