ஹிருணிகா உட்பட 9 பேர் நீதிமன்றில் - டிபென்டரை விடுவிக்க நீதவான் மறுப்பு

தெமட்டகொடை பகுதியில் நபரொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 9 பேர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இதன்போது, குறித்த கடத்தலுடன் தொடர்புடையதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகளை மேலதிக விசாரணைகளுக்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும் கடத்தல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் டிபென்டர் வாகனத்தை விடுவிக்க நீதவான் இதன்போது மறுப்பு வௌியிட்டுள்ளார். 

அத்துடன் இந்த வழக்கை மீண்டும் எதிர்வரும் 26ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -