அஷ்ரப். ஏ. சமத்-
அடுத்த 5 வருடத்திற்குள் கல்வி திதிட்டங்கள் மாற்றம் செய்யப்படும் அத்துடன் ஒவ்வொரு பிரதேச செயலாளா் பிரிவிலும் இரு பாடாசலைகள் வீதம் சகல வசதிகளும் கொண்ட பிரச்சித்த பாடாசாலை போன்று அபிவிருத்தி செய்யப்பட உள்ளது. இப் பாடசாலைகளுக்க 25 கோடி ருபாவுக்கு மேல் நிதி வழங்கப்படும்
இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளிலும் பயிலும் 44 இலட்சம் மாணவா்களுக்குமான இலவசப் பாடப்புத்தகங்கள் 420 வகையில் 44 மில்லியன் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இவற்றுக்காக அரசாங்கம் 3.6 பில்லியன் ருபாவை செலவழித்துள்ளது. என தெரிவித்தார்.
இன்று (5) 2016 ஆம் ஆண்டுக்கான இலவசப் பாடப்புத்தகங்களை மாணவா்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு கொழும்பு ஆனாந்தாக் கல்லுாாியில் நடைபெற்றது.
இலவசப் பாடப்புத்தகங்கள் வழங்கி வைக்கும் பிரதான நிகழ்வில் கல்வியமைச்சா் அகில விராஜ் காரியவாசம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சா் இராதக் கிருஸ்னன், பாராளுமன்ற உறுப்பிணா் உபாலி மாரசிங்க கல்வியமைச்சின் செயலாளா், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளா் நாயகம் திஸ்ஸ கேவித்தான மற்றும் கொழும்பு மாவட்ட பாடசாலைகளின் அதிபா்கள் மாணவா்களும் கலந்து சிறப்பித்தனா்.
இங்கு தொடா்ந்து உரையாற்றிய கல்வியமைச்சா் -
நான் கல்வியமைச்சினை பராமெடுத்து எதிா்வரும் 8ஆம் திகதியுடன் 1 வருடமாகவுள்ளது இலவச சீருடை விவகாரத்தில் பலவேறுபட்ட திசையில் அழுத்தங்களும் விமா்சனங்களும் வந்துகொண்டே இருக்கின்றனா். அத்தனைக்கும் அச்சம் கொள்ளாது துணிந்து பாடசாலைச் சீருடைக்கான வுவுச்சா் முறையை அறிமுகப்படுத்தினேன், இம் முறையில் சில குறைபாடுகள் இருக்கின்றன. காலப்போக்கில் அவைகள் சீர்செய்யப்படும். கடந்த ஆட்சியில் தரமற்ற படாசாலைச் சீருடையை கொள்முதல் செய்திருந்தாா்கள் அந்த 12 இலட்சம் சீருடைகள் கல்வியமைச்சின் களஞ்சியசாலையில் தேங்கிக் கிடக்கின்றன.
இதுபோன்ற நிதிமேசடி, பொருள் மோசடிகளை நிறுத்துவதற்கே இம் முறையை நாங்கள் அறிமுகப்படுத்தினோம்.
இலவச பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்வினை ஜ.தே.கட்சி ஆட்சிக் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவா்தனவே 1980 களில் குலியாப்பிட்டியவில் அப்போது கல்விச் சேவைகள் அமைச்சராக இருந்த லயனல் குனதிலக்க அவா்களின் காலத்தில் முதன் முதலாக ஆரம்பித்து வைத்தாா்.
ஆகவே நானும் அத்தொகுதியை பிரநிதிப்படுத்துபவன் என்ற வகையில் இத் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தவா்களை நாம் நினைவு கூறுதல் வேண்டும். இப் பாடப்புத்தகம் உரிய டென்டா்முறைப்படி அரச பதிப்பகங்களான இலங்கை அச்சக கூட்டுத்தபாணம், லேக் ஹவுஸ், ஆகிய நிறுவனங்களில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
இம்முறை உரிய காலப்பகுதிக்குள் 1- 12ஆம் வகுப்பு வரையில் உள்ள வகுப்பு மாணவா்களுக்கு புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தமிழ் மொழி முலம் சில மொழிபெயா்ப்புப் பிரச்சினைகள் உள்ளன இவற்றினை அடுத்த முறை நிவா்த்தி செய்யப்படும்.
இதற்காக முற்று முழுதாக கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளா் மற்றும் அதிகாரிகள் நன்றி கூறப்பட வேண்டியவா்கள். இம்முறை நவீன முறைப்படியும். மற்றும் கனனி பற்றிய தொழில் நுட்ப நுால்களையும் இருவெட்டுக்கள் முலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மாணவா்கள் பாவித்துவிட்டு தமது பின்வருகின்ற மாணவா்களுக்கு பாவிக்க கூடிய அளவில் இப் புத்தகங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
உலகிலேயே எந்தவொரு நாட்டிலும் இலவச பாடப்புத்தகம், இலவச சீருடை, வழங்கும் திட்டம் இலங்கையில் மட்டுமே உள்ளது. ஏழை பணக்கார என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அரச பாடசாலைகளில் நுால்கள் வழங்கப்படுகின்றன. பாடசாலைகளில் உள்ள ஆய்வு கூடங்களில் இரசாயனப் பொருட்கள் வாங்க நிதி இல்லாமல் இருந்ததையும் நிவா்த்தி செய்து இரசாய பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒவ்வொரு பாடாசலைகளிலும் 50 கனணிகள் வழங்கப்பட்டுள்ளன. அதனை முகாமைத்துவம், மற்றும் பராமறிப்பு இன்றி உதிரிபாகங்கள் பழுதடைந்து மூலைகளில் வீசப்பட்டுள்ளதை அவாதனித்தேன். . இதற்காக கனனிகளை வாடகை அடிப்படையில் பாடசாலைகளில் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த கம்பணிகளே கனனிகளை பராமரித்தல் வேண்டும்.
அத்துடன் 1200 பாடசாலைகளுக்கு மலசல கூடம் குடி தண்னீா் வழங்கும் திட்டம் நடைமுறைப்டுத்தப்படுகின்றது. அத்துடன் கிராமப் புற மாணவா்களுக்கு கால் அணி வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.
இராஜாங்க அமைச்சா் ராதக் கிருஸ்னன் உரையாற்றுகையில் -
இலவசப் பாடப்புத்தகத்தை அறிமுகப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவா்தனாவை நாம் என்றும் நினைவு கூறுதல் வேண்டும். இம்முறை உயா்
தரத்தில் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளன 5000 பேர் 3 பாடங்களிலும் ஏ அதி விசேட சித்தி பெற்றுள்ளனா். 1இலட்சத்து 50ஆயிரம் பேர்
பல்கழைக்கழகம் தகுதி பெற்றுள்ளனா்.
இதற்காக பாடுபட்டு கல்வியமைச்சு, ஆசிரியா்கள் அதிபா்கள் நன்றி கூறப்படல் வேண்டும்.
இந்தப் பாடப்புத்தகங்களில் மொழிபெயா்ப்புப் பிரச்சினைகள் உள்ளன. அவைகள் அடுத்தமுறை சீர் செய்யப்படல் வேண்டும். இலவசப் பாடப்புத்தகம் இலவச சீறுடை வழங்கினாலும் எமது நாட்டில் எழுத்துக் கொப்பிகள் தமக்கான கால் அணிகளை கூட வாங்க முடியாத ஏழை மாணவ மாணவிகள் இந்த நாட்டில் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனா். எனவும் இராஜாங்க அமைச்சா் இராதக் கிருஸ்னன் தெரிவித்தாா்.





