அம்பாறை பிராந்திய ஈமானிய எழுச்சி மாநாடு நாளை மறுதினம் 30ம் திகதி..!


அபு அலா -
ம்பாறை பிராந்திய ஈமானிய எழுச்சி மாநாடு நாளை மறுதினம் சனிக்கிழமை (30) மருதமுனை அக்பர் ஜூம்ஆப் பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர் றாபித்து அஹ்ஸின் ஸூன்னா நிருவாகத்தின் அம்பாறை பிராந்தியக் கிளையின் செயலாளர் இன்று (28) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அல்குர்ஆன், அஸ்ஸூன்னா ஒளியில் அகீதா, மன்ஹஜ், அஹ்லாக், குடும்ப வாழ்வு பற்றி சரியான அறிவூட்டி, சமூகக் கொடுமைகளைக்களையும் வழிகாட்டி, ஈமானிய விழிப்பூட்டும் ஈமானிய எழுச்சி மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை (30) மாலை 3.30 ஆரம்பிக்கப்பட்டு இரவு 9.30 வரை இடம்பெறவுள்ளது.

இதில் ஈமானிய எழுச்சியை நோக்கிய பயணம், அல் குர்ஆன் சுன்னாவை அணுகும் முறை, பிழையாகப் புரிந்துகொள்ளப்படும் தவ்ஹீத் கலிமா, சீதனக் கொடுமையும் அதனை ஒழிக்கும் வழிமுறையும், இல்லற வாழ்வு நல்லறமாதல் என்ற தலைப்புக்களில் பிரபல உலமாக்கள் மூலம் விளக்கவுரை நிகழ்த்தப்படவுள்ளது.

அல்குர்ஆன், அஸ்ஸூன்னாவை அடிப்படையாகக் கொண்டே இவைகள் யாவும் இடம்பெறவுள்ளது. இதில் அம்பாறை மாவட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -