தெமட்டகொடயில் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தி அச்சுறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவின் 6 பாதுகாவலர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பட்டப்பகலில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்த புடவைக்கடையில் உள்ள சீசீடிவி கமிராவில் பதிவாகியுள்ளது. சம்பவத்தின் போது கடத்திச் செல்லப்பட்ட இளைஞன் ஹிருனிகாவுக்கு சொந்தமான கொலன்னாவ காரியாலயத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது, ஹிருனிகா அவரை அச்சுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், ஹிருனிகாவின் பாதுகாவலர்கள் தன்னை தாக்கியதாக அந்த இளைஞன் முறையிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் 6 பேர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சரணடைந்துள்ள நிலையில், சம்பவத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ள ஹிருனிகா இதுவரையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட வில்லை. ஹிருனிகா பிரேமசந்திர நபர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பது இது முதல் சந்தர்ப்பம் அல்ல.
2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி இவரினால் வர்த்தகர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதோ வீடியோ>>>
ஹிருணிகா பழைய ரவுடி - வெளியானது வீடியோ Read Full :--->>> http://www.importmirror.com/2015/12/video_25.html
Posted by importmirror.com on Friday, 25 December 2015
