இந்த வருடத்தின் முதல் 11 மாத காலப் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 15 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகார சபை அறிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது 18.1 வீத அதிகரிப்பு எனவும் அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ள நாடுகளில் சீனா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஜேர்மன் ஆகியன பிரதான இடத்தை வகிக்கின்றன.
நவம்பர் மாதத்தில் மாத்திரம் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 174 பேர் எனவும் அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


