பொத்துவில் பிரதேசத்திற்கான குடிநீர், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு சீராக வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்து பொத்துவில் விழிப்புக் குழு எனும் அமைப்பினால் இன்று ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கடந்த டிசம்பர் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்திற்கு விளக்கமளிக்கும் வகையில் கடந்த 20ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் பிரதேச அமைப்பாளரும், முன்னாள் பிரதேச சபை தவிசாளருமான எம்.எஸ்.ஏ.வாசித் துண்டுப்பிரசுரமொன்றை வெளியிட்டிருந்தார்.
"பொத்துவில் பிரதேசத்திற்கு நீர் வழங்குவதற்காக ஐந்து நிலக்கீழ் கிணறுகளை அமைக்க 6.50 கோடி ரூபா நிதியொதுக்கீடு அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான கேள்வி மனுக் கோரப்பட்டுள்ளதாகவும்" குறித்த துண்டுப்பிரசுரத்தில் பிரதேச அமைப்பாளர் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன்ஆர்ப்பாட்டத்தினை பகிஷ்கரிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் அன்றூ காலை பொத்துவில் முர்சான சந்தியில் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.
இதன்போது அங்கு வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் பிரதேச அமைப்பாளரான எம்.எஸ்.ஏ.வாசிதிடம், பிரதேசவாசியொருவர் இந்த நீர் விநியோகம் தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, குறித்த நபர் மீது அவர் தாக்குதல் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதனால் குறித்த ஆர்ப்பாட்டம் மற்றுமொறு இடத்திற்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது பற்றி முன்னாள் தவிசாளர் வாசித் அவர்கள் குறித்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கின்றார் வீடியோ>>>
SLMC வாசித் தாக்குதல்
மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட முன்னாள் தவிசாளர் வாசித்? - நடந்தவற்றை விளக்குகிறார் (வீடியோ) செய்திக்கு---> http://www.importmirror.com/2015/12/blog-post_101.html
Posted by importmirror.com on Friday, 25 December 2015
