அஸ்ரப் ஏ சமத்-
இலங்கையில் நேற்று நடைபெற்ற மேயா்கள் மாநாட்டுக்கு வருகை தந்துள்ள 15 நாடுகளின் மேயர்கள் இன்று (14)ஆம் திகதி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் தத்தமது ஞாபகாா்த்தமாக முதிரை மரக் கண்ருகளை நாட்டி வைத்தனா்.
இந் நிகழ்வு கொழும்பு மேயா் ஏ.ஜே.எம்முசம்மில் தலைமையில் நடைபெற்றது.
மாலைதீவு . பாக்கிஸ்த்தான் காரச்சி, டில்லி, பங்களதேஸ் - டக்கா, இந்தோணிசியா ஜக்காத்தா, கொரியா, லண்டன், துருக்கி போன்ற நாடுகளின் மேயா்கள் மரக்கண்டுகளை நாட்டி வைத்தனா். அவா்களது பெயா்களும் அங்கு பொறிக்கப்பட்டிருந்தது.







