எப்.முபாரக்-
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி, தங்கபுரம் பிரதேசத்திலுள்ள வீடொன்றினுள் திங்கட்கிழமை (28) இரவு உட்புகுந்து தங்க நகைகள், பணம் போன்றவற்றை திருடிய 18 மற்றும் 20 ஆகிய வயது இளைஞர்கள் இருவரை இன்று செவ்வாய்க்கிழமை (29) கைதுசெய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டு உரிமையாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டபோதே, இவ்விரு இளைஞர்களையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களையும் நாளை புதன்கிழமை (30) மூதூர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
