இக்பால் அலி-
பறகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக யாழ்ப்பாணம் சோனகத் தெரு பொம்மைவெளி மையவாடியில் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் வெள்ள நீர் இடர்பாடுகளுக்குள் சிக்குண்டு கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்தக் குடும்பங்களுக்கு கூரைத்தகடு, சீமெந்து பெக்கட், மணல், வெள்ளம் தேங்கி நிற்கும் நிலங்களை மண் போட்டு நிரப்புதல் போன்ற மனிதாபிமான உதவிகள் வியாழக்கிழமை 20 -12-2015 வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு 30 குடும்பங்கள் உள்ளன. ஒவ்வொரு குடும்பத்திற்கு தலா 14 கூரைத் தகடுகளும் , ஐந்து சீமெந்து பெக்கெட்டுடன் மணலும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் வெள்ளம் தேங்கி நிற்கும் நிலங்களை மண் போட்டு நிரப்பும் பணிகளும் அங்கு உடன் ஆரம்பத்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பறகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.
பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான், யாழ்ப்பாணம் , களிநொச்சி மாவட்ட மக்கள் சமூக அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் சுபியான், யாழ்ப்பாணம் மாநாகர சபையின் மொழி பெயர்ப்பு உத்தியோகஷ்தர் அஷ்ஷெய்க் ரொசான் மதனி, என். பீ. எம். ஜுனைத் மதனி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.




