ரிசானா நபீக்கிற்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை கொடுக்கபட்ட பிறகு இந்த நாட்டிற்கு கிடைத்த கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரூபா பணத்திற்கு என்ன நடந்தது என தமக்கு எந்த விபரமும் கிடைக்கவில்லை என அவரின் தாயார் தெரிவித்தார்.
அப்போதிருந்த அரசின் அமைச்சர் , சவுதி அரசிடம் இருந்து இந்த பணத்தை வாங்கி ரிசானாவின் தாய்க்கு கொடுக்க முனைந்ததாகவும், அதனை அவர் மறுத்து தன் மகளின் ஜனாஸா கிடைத்தால் மட்டும் போது என தெரிவித்து இருந்தார்.
அதன் பிறகு ஜனாசாவும் கிடைக்கவில்லை, குறிபிட்ட பணமும் எங்கு போனது? கிடைத்ததா இல்லையா? என்ற விபரமும் தமக்கு கிடைக்கவில்லை, அது பற்றி தாம் தெரிந்து கொள்ள வேண்டும் என சென்ற வாரம் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்த போது இதனை அவர் தெரிவித்தார்.

