கொத்மலை விபத்தில் பெண் பலி..!

க.கிஷாந்தன்-
நுவரெலியா நகரத்தில் இருந்து கண்டி நோக்கி சென்ற லொறி ஒன்று கொத்மலை வெதமுல்ல தொழிற்சாலைக்கு செல்லும் சந்தியில் பாதையை கடக்க முயன்ற பெண் ஒருவர் மீது மோதியதில் 31 வயது மதிக்கதக்க வரதராஜ் சந்திரகலா என்று அடையாளம் காணப்பட்ட இப்பெண் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிர்யிழந்துள்ளார்.

இவர் நுவரெலியா லபுக்கலை தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து வெதமுல்லை கடை ஒன்றுக்கு சென்ற போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் விபத்தில் உயிரிழந்த பெண் ஒரு பிள்ளைக்கு தாய் எனவும் கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து 28.12.2015 அன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் லொறியின் சாரதியை கைதுசெய்துள்ளதுடன் சம்பவ இடத்தில் இருந்து லொறியை அகற்றவிடாமல் அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்துள்ளனர். 

இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை உருவாக்கியிருந்தது. பொலிஸாரின் தலையீட்டின் பின் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொத்மலை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -