அமெரிக்காவில் சரத் பொன்சேகாவிற்கு வந்த சோதனை..!

மெரிக்காவில் உள்ள தனது மகள்மகளை பார்க்க முடியாத நிலையில் திண்டாடுகிறார் இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

அமெரிக்கா செல்வதற்கு நுழைவிசைவு மறுக்கப்பட்ட நிலையில், வதிவிடஉரிமை (கிறீன் காட்) அட்டைக்கு இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீள விண்ணப்பித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்காவில் உள்ள தனது மகள்களைப் பார்வையிடுவதற்காக, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நுழைவிசைவுக்கு விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில் சரத் பொன்சேக்காவிற்கான நுழைவு விசாவினை அமெரிக்கத் தூதுரகம் வழங்க மறுத்து விட்டது.

ஆனால் அவர், அமெரிக்காவினுள் நுழைவதற்காக, தனது வதிவிட உரிமைப் பத்திரத்தை புதுப்பிப்பதற்கு விண்ணப்பித்துள்ளார்.

அமெரிக்க வதிவிட உரிமைப் பத்திரத்தைக் கொண்டிருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சிறையில் இருந்த போது, அது காலாவதியாகியிருந்தது.

அதற்குப்பின்னர் அவர் அந்த வதிவிடஉரிமைப் பத்திரத்தைப் அவர் புதுப்பிக்கவில்லை.

நுழைவிசைவு மறுக்கப்பட்டதையடுத்து, தனது வதிவிட உரிமைப் பத்திரத்தைப் புதுப்பிக்குமாறு அமெரிக்கத் தூதுரகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

எனினும், வதிவிட உரிமை பத்திரம் புதுப்பித்தல் நடவடிக்கை அமெரிக்க தூதரகத்தினால் மேற்கொள்ளப்படுவதில்லை. அமெரிக்காவிலேயே இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதனால்,வதிவிட உரிமைப் பத்திரத்தைப் புதுப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்துக்கான பதிலை அவர் எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இதற்கான பதிலைப் எவ்வாறு அமையும் என்பது சந்தேகமே. அமெரிக்க துணைத்தூரகம் அனுமதி வழங்கினால் மட்டுமே இது சாத்தியமாகும்.

ஆனால் தனக்கு அனுமதி கிடைக்கும் என அவர் காத்திருப்பதாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரனின் செயற்பாடுகளினால் தான் சரத் பொன்சேகா அமெரிக்கா செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -