யஹியாகான் பௌண்டேசனினால் இலவச குடி நீர் மின்சார இணைப்பு மற்றும் வாழ்வாதார உதவிகள்..!

எம்.வை.அமீர் -
நீண்ட காலமாக வறிய மற்றும் உதவியை எதிர்பார்ப்போருக்கு உதவி வரும் யஹியாகான் பௌண்டேசன் சமூக சேவை அமைப்பினால் வறிய குடும்பங்களுக்கு இலவச குடி நீர் மற்றும் மின்சார இணைப்பு வழங்கும் நிகழ்வு 2015-12-26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பௌண்டேசனின் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உச்சபீடஉறுப்பினரும் மற்றும் அம்பாறை மாவட்ட பொருளாளரும்மான, சமூக சேவையாளர்அல்ஹாஜ் யஹியாகான் தலைமையில் கல்முனை காரியாலயத்தில் இடம்பெற்றது.

இவ்நிகழ்வின் போது 25 வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பினை வழங்குவதற்கான கடிதங்களும் மற்றும் 05 குடும்பங்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டதுடன், சுயதொழில் முயற்சியாளர்கள் 05 பேருக்கு அவர்களுடைய தொழில் முயற்சிகளை அபிவிருத்தி செய்யும் முகமாக காசோலைகள் வழங்கப்பட்டது.

மேலும் இவ்நிகழ்வின் போது கடந்த முறை தரம் 05 புலமைப்பரீட்சை சித்தியடைந்தசாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய மாணவி செல்வி பாத்திமா சுஹாவுக்குபணப்பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டார்.

இந்நிகழ்வில் யஹியாகான் பௌண்டேசன் சமூக சேவை அமைப்பின் உப தலைவரும்மஹ்மூத் மகளிர் கல்லூரியின் உப அதிபருமாகிய அஸ்மி காரியப்பர் மற்றும்அங்கத்தவர்கள் உட்பட ஆலோசகர்களான அல் ஜலால் வித்தியாலய அதிபர் நபார்,அல்ஹிலால் வித்தியாலய பிரதிஅதிபர் மன்சூர் மற்றும் ஆசிரியர்களான இப்ராஹீம்,மாகிர், புஹாரி , பைசால் மற்றும் உப தபால் அதிபர் முபாரக் மற்றும் இன்னும் பலர் கலந்துகொண்டார்கள்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -