இந்தியாவில் நடைபெற்ற ஊட்டச்சத்து பானங்கள் மற்றும் உணவுகளை தயாரிக்கும் நிறுவனங்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணிஎச்.எம்.எம்.ஹரீஸ் இன்று புதன்கிழமை (30) இந்தியாவுக்கு ஐந்து நாள் விஜயம் ஒன்றைமேற்கொண்டுள்ளார்.
இந்தியாவின் புனே நகரில் இன்று (30) நடைபெற்ற மாநாட்டில் பிரதி அமைச்சர் ஹரீஸ்கலந்து கொண்டதுடன் ஊட்டச்சத்து பானங்கள் மற்றும் உணவுகளை தயாரிக்கும்தொழிற்சாலையினையும் பார்வையிட்டார்.
இலங்கையின் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டு விளையாட்டுவீரர்களுக்கு ஊட்டச்சத்துள்ள பானங்கள் மற்றும் உணவுகளை வழங்குவதற்குவிளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





