
தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் காரணத்தினால், இனிமேல் ஜெனீவா சென்று குற்றவாளிக் கூண்டில் கைகட்டி நிற்க வேண்டிய அவசியம் என இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டார்.
2010ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டுகளில் நாட்டில் ஏதாவது ஓர் இடத்தில் நாள்தோறும் சமய ரீதியான, இன ரீதியான வன்முறைச் சம்பவங்கள், அசம்பாவிதங்கள் நடந்துகொண்டிருந்தன.
அவ்;வாறானதொரு மோசமான சூழ்நிலையை உருவாக்கிய ஆட்சியாளர்களை ஒதுக்கிவிட்டு, புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்கியது மாத்திரமல்ல, வெளிப்படைத்தன்மையுள்ள ஒரு அரசியல் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம் எனவும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
|