இஸ்லாத்தை ஏற்க மக்களுக்கு உண்மைகளை எத்திவைத்த தம்பதி...

இவருடைய பெயர் எட்வின், பிலிப்பைன் நாட்டை சேர்ந்தவர். இறுதி பேருரையின் போது இங்கு வந்த நீங்கள் இங்கு வராத மக்களுக்கு இஸ்லாத்தை கொண்டு செல்லுங்கள், என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி கிடைத்தாலும் அதை பிறருக்கு எத்தி வையுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களே....

நம் உயிரினும் மேலான அண்ணலம் பெருமகனார் ரசூலே கரீம் சல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் நாவிலிருந்து அந்த வார்த்தை வெளிவந்தவுடன் சஹாபாக்களின் வாகனங்கள் எந்த திசையில் நின்றதோ அதே திசையில் புறப்பட்டு இஸ்லாத்தை உலக மக்களுக்கு சொல்வதற்கு சஹாபாக்கள் புறப்பட்டார்களோ....

அந்த இஸ்லாம் பிலிப்பைன் நாட்டை சேர்ந்த எட்வினை வந்தடைகிறது.


ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு எட்வின் இம்ரானாக மாறுகிறார். அரபு நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் மனைவி, குழந்தைகளுடன் தற்போது வாழ்ந்து வருகிறார்.

எட்வினுக்கு கிடைத்த இஸ்லாம் கிடைக்காத கோடிக்கணக்கான எடிவின்களுக்கும், டேவிட்களுக்கும், பீட்டர்களுக்கும் கிடைப்பதற்காக இரவு பகல் பாராமல் கணவன் மனைவி இருவரும் இஸ்லாமிய பிரச்சாரம் செய்து பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் இம்ரான் மூலமாகவும், அவருடைய மனைவி மூலமாகவும் இஸ்லாத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுள்ளனர்.


இந்த தம்பதிகளை நினைக்கும் போது பல நேரங்களில் நாம் பொறாமைப்பட்டது உண்டு, நமக்கு கிடைத்த இஸ்லாத்தை, இஸ்லாத்தின் சுவையை நாம் மட்டும் சுவைக்கிறோமே, நம்முடைய தொப்புள் கொடி உறவுகளுக்கு கொண்டு சென்று அவர்களையும் சுவைக்க வைக்க முடியாமல் நிற்கிறோம்.

நிச்சயமாக நாம் சுயநலவாதிகள், நமக்கு கிடைத்த பொக்கிஷத்தை நம் உறவுக்கு கிடைக்கக்கூடாது என்று மனதால் நினைக்காவிட்டாலும் செயலால் சுணங்கி இருக்கிறோமே, நம்மை விட இம்ரான் ஆயிரம் மடங்கு உயர்ந்து சென்று விட்டார்.

இம்ரான் மீதும் இம்ரானின் குடும்பத்தார் மீதும் ஏக இறைவனின் நல்லருள் என்றென்றும் நிலவ ஏக இறைவனிடம் துஆ செய்யுங்கள்....

எமது நிருபர்

------------------------------- Edit Here -------------------------------------
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -