தேரருடனான விவாதத்தில் அமைச்சர் ரிசாத் வெற்றிபெறுவார் - கசியும் சில உண்மைகள்

வில்பத்து விவகாரம் சம்பந்தமான விவாதத்துக்கு சாகர தேரரை அழைத்துள்ளார் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள். எதிர்வரும் மாதங்களில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற இருக்கின்ற சூழலில் அமைச்சரின் இந்த அழைப்பு அரசியல் மட்டத்தில் பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. 

அரசியலில் பல சித்து விளையாட்டுக்களும், தந்திரோபாயங்களும், காய்நகர்த்தல்களும் இருக்கின்றது. இதில் அல்லாஹ்வை பயந்தவர்கள் நியாயமாக நடந்துகொள்ளுவார்கள். நடிப்பவர்கள் மக்களை எப்படியெல்லாம் மடையர்களாக்கி தன்பக்கம் திருப்பமுடியுமோ அப்படியான சூழ்ச்சி வேலைகலெல்லாம் செய்வார்கள். 

இந்த உண்மையை புரிந்துகொண்டவர்கள் புத்திசாலிகளாவர். புரியாதவர்கள் பாமரமக்களாவர். அரசியல் அனுபவமற்ற சில பாண்டித்தியம் பெற்ற கல்விமான்களுக்குகூட இந்த சித்துவிளையாட்டுக்களை புரிந்துகொள்வது கடினம். 

அந்தவகையில் கடந்த சில காலங்களுக்கு முன்பு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், தேர்தலில் தன்னால் வெற்றிபெற முடியாது என்பதனை உணர்ந்ததனால், எப்படியாவது வெற்றிபெற்றேயாகவேண்டும் என்ற நோக்கில் தான் கடத்தப்பட்டுள்ளதாக ஊரிலே ஒரு பொய்ப்பிரச்சாரத்தின் மூலம் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தார். 

பின்பு மறுநாள் ஊரைத்திரட்டி, மயங்கிய நிலையில் கடற்கரை ஓரமாக கடத்தியவர்கள் விட்டுச்சென்றதாக ஒரு நாடகம் சிறப்பாக நடாத்தப்பட்டு அத்தேர்தலில் அனுதாப வாக்குகளின் மூலம் அவர் வெற்றிபெற்றிருந்தார். 

சிலர் தங்களது வீட்டுக்கு அல்லது வாகனத்துக்கு தனது ஏவல்கள் மூலமாக குண்டு அல்லது துப்பாக்கி பிரயோகம் செய்து மக்களின் அனுதாபத்தினையும், அரசியல் பிரபல்யத்தையும் தேட முயற்சிப்பார்கள். 2000 ஆண்டு நூர்தீன் மசூரை எதிர்த்து பொதுத்தேர்தலில் சோமபாலவுடன் சேர்ந்து போட்டியிட்டபோது, தன்னை மக்களுக்கு பிரபலப்படுத்தி அனுதாபத்தினை பெறும்பொருட்டு இவ்வாறான சித்துவிளையாட்டுக்களில் ஈடுபட்ட அனுபவம் அமைச்சர் அவர்களுக்கு உள்ளதாக வன்னி தகவல்கள் கூறுகின்றன. 

அதுபோலவே தேர்தல் ஒன்று நெருங்குகின்றபோது வில்பத்து விவகாரத்தினை விளம்பரப்படுத்தி, தான் சிங்கள இனவாதிகளுடன் மோதுவதாக நாடகம் ஆடுவது அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அரசியல் திருகுதாளங்களாக பார்க்கப்படுகின்றது.

தான் தேர்தலில் தோல்வியடைந்து விடுவேனோ என்ற பயத்தினால், தனது வெற்றியை உருதிப்படுத்தும்பொருட்டு கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்பு இதே வில்பத்து விவகாரம் பூதாகரமான பிரச்சினையாக திட்டமிட்டவகையில் உருவாக்கப்பட்டு தேசிய பத்திரிகைகளிளும், தொலைக்காட்சிகளிலும், முதன்மைச்செய்திகளாக விளம்பரப்படுத்தப்பட்டது. பின்பு தேர்தல் முடிந்தவுடன் வில்பத்து விவகாரம் கிடப்பில் போடப்பட்டது. 

எதிர்வரும் சில மாதங்களில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற இருப்பதனால், சில பிரதேச சபைகளை கைப்பேற்றும் பொருட்டும், முஸ்லிம் காங்கிரசின் சில சபைகளை ஆட்டம் காணச்செய்யும் பொருட்டும், கிடப்பில் போடப்பட்ட வில்பத்து விவகாரம் மீண்டும் அரங்கத்துக்கு வந்துள்ளது. 

பிச்சைக்காரன் தனது காலில் இருக்கும் காயத்தினை குணப்படுத்துவதற்கு வைத்தியரிடம் செல்வதில்லை. மாறாக அதனை காட்டிக்காட்டி பிச்சை எடுப்பதற்கே அந்த காயத்தினை பயன்படுத்துவான். அதுபோலவே வில்பத்து விவகாரத்துக்கு தீர்வினை எட்டுவதற்கு ரிசாத் பதியுதீன் விரும்பமாட்டார். தீர்வு காணப்பட்டால் எதிர்காலங்களில் வருகின்ற தேர்தல்களில் எதனைக்காட்டி மக்களிடம் வாக்கு பிச்சை கேட்கமுடியும்.

அண்மைக்காலமாக தன்னை ஒரு தேசிய தலைவராக தனது ஏவல்கள் மூலம் சுயவிளம்பரம் செய்கின்ற ரிசாத் பதியுதீனுக்கு, தேசிய தலைவர் என்பதனை மக்கள் மத்தியில் உறுதிப்படுத்தும் தேவை அதிகம் காணப்படுகின்றது. 

அதனால் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் சோம தேரருடன் விவாதம் செய்து பிரபலமடைந்ததுடன், நன்மதிப்பை பெற்றிருந்தார். அதேபாணியில் தானும் தேரர் ஒருவருடன் விவாதம் செய்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்து அஷ்ரப்புக்கு அடுத்ததாக தான்தான் தேசியத் தலைவர் என்று விளம்பரம் செய்வதற்காகவே விவாத மேடைக்கு பாஹியங்கள ஆனந்த சாகர தேரரை அமைச்சரே அழைத்திருக்கின்றார். 

தீக்கவாபி சம்பந்தமாக மறைந்த தலைவர் அஷ்ரப்புடன் விவாதித்த சோம தேரர் என்பவர் ஒரு சாதாரணமானவரள்ள. வாதத்திறமயுள்ள பாண்டித்தியம் பெற்ற ஒரு சிறந்த கல்விமானாக திகழ்ந்தவர். அவர் இலங்கையில் மட்டுமல்ல. உலகில் உள்ள பௌத்தர்கள் மத்தியில் பெரிதும் மதிக்கப்படுகின்ற வணக்கத்துரிய தேரராக காணப்பட்டார். 

ஆனால் அமைச்சருடன் விவாதம் புரிய இருக்கின்ற பாகியங்கள ஆனந்த சாகர தேரர் என்பவர் சோம தேரருடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கோ, அமைச்சர் ஒருவருடன் விவாதிக்கின்ற அளவுக்கோ திறமைவாய்ந்தவரல்ல. அவர் சிங்கள மக்கள் மத்தியில் அறியப்படாத, சாதாரண நிலையில் உள்ள ஒரு பௌத்த குரு ஆவார். இவரை பிக்குகள் முன்னணி செயலாளராக விளம்பரப்படுத்தினாலும், அது ஒரு சிறிய அமைப்பே தவிர பிக்குகள் சம்மேளனம் அல்ல. 

இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் விவாதத்துக்கு திகதியினை குறித்ததன் பின்பே, அமைச்சர் ரிசாத் அவர்கள் மக்களிடம் ஆதாரங்களை கோரியிருக்கின்றார். அதாவது 1990 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், அங்கு வாழ்ந்தவர்களின் வீட்டு காணி உறுதியின் பிரதியினையும், இன்னும் முடியுமான ஆதாரங்களையும் தன்னிடம் கிடைக்க செய்யுமாறு மக்களை கோரியிருகின்றார். இங்கேதான் அமைச்சர் மீதுள்ள சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அகதிகளாக்கப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் கடந்தும், இவ்வாறான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையிலா அமைச்சர் உள்ளார்? உண்மையில் ஆதாரங்கள் தேவைப்பட்டால் வடமாகான அகதிகள் சங்க செயலாளரிடம் இருந்து போதிய ஆதாரங்களையும், புகைப்படங்களையும், வீட்டு காணி உறுதியின் பிரதிகளை கொழும்பில் உள்ள மாளிகாவத்தை கச்சேரியில் இருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இவைகளை மக்களிடம் கோருவதன்மூலம் இது ஒரு மக்களை மடயர்களாக்குகின்ற அரசியல் சித்து விளையாட்டு என்பது நிரூபணமாகின்றது. 

இனவாதிகளுக்கு தரகர்கள் மூலமாக பணத்தினை வாரி வழங்கி, இவ்வாறான வில்பத்து பிரச்சினையை இனரீதியான பிரச்சினையாக பூதாகரமாக்கி தனது அரசியல் இருப்பை உறுதிப்படுத்த அமைச்சர் நினைக்கின்றாரா ? இவ்வாறான சித்துவிளையாட்டுக்களை அறியாமல் விவாதத்தில் அமைச்சர் வெற்றி பெற வேண்டும் என்று சில பாமர மக்கள் பிரார்த்திப்பதுதான் வேதனையான விடயமாகும். விவாதத்தில் பங்கேற்கும் தேரருக்கு பணம் வழங்கப்பட்டதாக அறியக்கிடைக்கின்றது. ஆனால் எவ்வளவு என்பதுதான் தெரியவில்லை. 

எனவே திட்டமிட்டபடி விவாதத்தில் அமைச்சர் வெற்றி பெறுவார். பல ஆதாரங்களுடனும், பைல் கட்டுகளுடனும் அமைச்சர் விவாத அரங்குக்கு செல்வார் ஆனால் தேரருக்கு எந்தவித போதிய ஆதாரங்களும் இருக்கமாட்டாது. இவைகளெல்லாம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நாடகமாகும்.

முகம்மத் இக்பால்,
சாய்ந்தமருது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -