ஹிருணிகாவின் செயற்பாடு - ஆராயும் ஐக்கிய தேசியக்கட்சி..!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவின் செயற்பாடு மற்றும் அது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விடுமுறையின் பின்னர் ஆராயப்படும் என்று ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் தெமட்டகொடையில் இளைஞர் ஒருவரை மெய்பாதுகாவலர்கள் கடத்திய குற்றச்சாட்டு தொடர்பில் ஹிருணிகா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் ஹிருணிகாவின் வாகனத்திலேயே இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில் கட்சி இன்னும் இந்த விடயம் தொடர்பில் கூடி ஆராயவில்லை என்று கட்சியின் செயலாளர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விசாரணைகள் தொடர்வதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -