நல்லாட்சி கூட்டரசாங்கத்தில் நிதி அமைச்சுப் பதவி ஜனவரி மாதம் முதல் ரவி கருணாநாயக்கவிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாஷிமுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
100 நாள் வேலைத்திட்டத்தின் போதும், புதிய அரசாங்கத்திலும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கடந்த வரவு செலத் திட்டத்தின் போதும் வரி விதிப்பு தொடர்பில் சிக்கல் நிலைமை ஏற்பட்டன.
இதற்கு முன்னர் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கப்பட்டிருந்த நிதி அமைச்சின் சில பொறுப்புக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மலிக் சமரவிக்ரமவுக்கு வழக்கப்பட்டதனால், கட்சிக்குள் பல கருத்து முரண்பாடுகள் எழுந்திருந்தன. ஒரே அமைச்சுக்கு இருவரும் குழுக்களை அமைத்ததும் சிக்கல் நிலைமையை ஏற்படுத்தியிருந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
