"சலகுன" விவாதம் ஒரு நடுநிலை பார்வை..!

அமைச்சர் ரிஷாத் இன் பக்கம் : 

1. முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான வரலாற்று ஆவணங்களை தக்க நேரத்தில் வெளிப்படுத்தி விவாதித்தமை (+) 

2. பரீட்சயமற்ற மொழியிலும் தன்னால் இயன்ற அளவு இறுதிவரை போராடியமை (+) 

3. நடுவர்களின் இனவாதம் பூசிய பல கேள்விகளுக்கு மிக்க நிதானமாகவும், சானக்கியத்தனமாகவும் பேசியமை (+) மகே சமாஜ ?

4. தன்னை தேரரும், நடுவர்களும் ஒன்றுசேரவே கேள்விகளாலும், குறுக்கிட்ட பேச்சுகளாலும் வாயடைக்க முயன்ற போதெல்லாம் நிறுத்தாது பேசியது (+) 

5.தன் சொத்து விவகாரம் தொடர்பில் தேரர் வினாவெழுப்பிய போதெல்லாம் அமைதி காத்தமையும், தடுமாறியதும் ( - ) காணி உறுதிகள்

6.அடிக்கடி சம்மந்தமில்லாத வண்ணம் முஸ்லிம், முஸ்லிம் என்று தனித்து பேசியமை ( - ) 

7. தன் மேல் சுமத்தப்பட்ட "போதைப்பொருள் விற்பனை" குற்றச்சாட்டுக்கான அமைச்சரின் பதிலடி மைனஸ் ( - ) 

பாஹியன்கல ஆனந்த சாகர தேரர் பக்கம் : 

1. அதிக தேடல் கொண்டவர் (+) 

2. 2012 (மரிச்சுக்கட்டி, கரடிக்குழி) போன்ற போன்ற பிரதேசங்கள் வில்பத்து வனவிலங்கு சரணாலயத்திற்குரியது என்று Gazate பண்ணும் போதெல்லாம் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான நீங்கள் எங்கு இருந்தீர்கள் ?(இது போன்ற நியாயமான கேள்விகள் + ) 

3. தான் ஒரு இனவாதி என்பதனை தன்னை அறியாமலேயே சில வெளிப்படை துவேச கருத்துக்கள் மூலம் வெளிக்காட்டியமை ( - )

4. தலைப்பிலிருந்து அடிக்கடி விலகிசென்றமை ( - ) அமைச்சரின் குடும்ப, சொத்து விவகாரம்  # அரபு நாட்டு நிதி உதவி  # ஐ எஸ் ஐ எஸ் விவகாரம்

5. தன் பக்க நியாங்கள் தலைப்பிற்கு போதாததை கருத்திற்கொண்டு ஏனைய உத்திகளை கைக்கொண்டமை ( - )   அல் - குர்ஆன் சத்திய வாக்கு மூலம் 

துணிச்சலுடன் போராடிய அமைச்சருக்கு வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும். ஆனால் இன்னமும் முற்றுப்பெறாத விடயமாக இவ்விடையம் இருப்பதே சில அரசியல் பெருச்சாளிகளுக்கு கொண்டாட்டமான விடயமே அவர்களது அரசியல் இலாபம் கருதி. 

யாசீர் எம். அனீபா -
சமூகப்பணி இளமாணி , 3ம் வருடம்,
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -