சம்மாந்துறையில் இன்று துக்கதினம் அனுஸ்டிப்பு - சோகத்தில் ஆழ்த்திய கோர விபத்து

ஜலீல் ஜீ- 
நேற்று அதிகாலையில் கொழும்பு – கண்டி பிரதான வீதியிலுள்ள வறக்காபொல தும்மலதெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் மரணமடைந்ததுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு குழந்தை, மூன்று பெண்கள், ஒரு ஆண் ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

சம்மாந்துறையிலிருந்து கொழும்பை நோக்கி சென்று கொண்டிருந்த வானும், பிலியந்தலையிலிருந்து சோமாவதிக்கு யாத்திரீர்களை ஏற்றி வந்து கொண்டிருந்த பஸ்ஸும் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இவ் வாகன விபத்து இடம் பெற்ற போது குறிப்பிட்ட பகுதியான வரக்காப்பொலையில் வாழ்ந்த மக்களின் அவசர மீட்புப்பணிகளை செய்திருந்தனர். 

சம்மாந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி உம்ரா கடமைக்கு செல்வதற்கான கடவுச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளுவதற்காக பயணித்த வேலையில் இவ்வனர்த்தம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்களின் ஜனாஸாக்களை வரக்காப்பொல பிரதேச மக்கள் மிகப்பத்திரமான முறையில் வைத்தியசாலை, பொலிஸ் நிர்வாக செயற்பாடுகள் அனைத்தையும் அவசர அவசரமாக செய்து குளிப்பாட்டி, கபனிட்டு அவர்களின் தனிப்பட்ட சொந்த வாகனங்களான லொறி, வான், கார், கூலர் போன்றவைகளின் மூலமாக சம்மாந்துறைக்கு இன்று 31 அதிகாலை 3.00மணிக்கு கொண்டுவந்து கையளித்த அந்த பெரும் உள்ளங் கொண்ட சகோதரர்களுக்கும், உதவி ஒத்தாசைகள் புரிந்த அப்பிரதேச மக்களுக்கும் தனது ஆழ்ந்த நன்றிகளை சம்மாந்துறை பிரதேச சபை வேட்பாளர் எம்.எச்.எம்.புவாத் அவர்கள் ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கின்றார்.

இன்றைய தினத்தினை துக்க தினமாக சம்மாந்துறை நமிக்கையாளர் சபை பிரகடனப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -