இந்தோனேஷியாவில் 6.9 ரிக்டர் அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் கிழக்கே உள்ள அம்போன் தீவிலேயே இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இது அம்போன் தீவில் இருந்து தென் கிழக்கே 174 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கமானது பூமிக்கடியில் 75 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது
நிலநடுக்கம் தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்களும் வெளியாவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
