கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், சுயதொழில் வாய்ப்பில் ஈடுபடுபவர்களின் சங்கத்தின் முன்னாள் தலைவருமான மஹிந்த கஹாந்தகம கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூபாய் 50 ஆயிரம் பெறுமதியான காசோலையை திருடியமை மற்றும் அதனை பணமாக்கியமை தொடர்பாக கைது செய்யப்பட்ட சுயதொழில் சம்மேளன முன்னாள் தலைவர் மஹிந்த கஹந்தகம பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னரே இந்த பிணை வழங்கப்பட்டது.
சந்தேக நபர், தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய அனுமதித்தார்.
