விவாதத்தின் மீதான எனது குறிப்புகள கருப்பெருளை தேடிய விவாத அரங்கம் - அஸ்மி ஏ கபூர்

ரிசாட் அமைச்சர் ஆனந்த தேரர் இடையிலான விவாதம் இனங்களுக்கிடையிலான நல்லுறவுக்கு குந்தகமாக அமைந்து விடுமோ?என்கிற எதிர்பார்புகளுடன் தேரரினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த விடயத்தில் இரண்டு குறிப்புகளை எடுத்து கொள்ளலாம்.

1.விவாத அரங்கின் உள்ளும்
2.அரங்கு தொடர்பான வெளி அலசலும்

அரங்கினுள்ளே வில்பத்து முஸ்லீம்களுடைய பூர்வீக நிலம் என்பதை அமைச்சர் இருக்கின்ற சட்ட பிரமாணங்களின் அடிப்படையில் எடுத்துரைத்து மக்களினுடைய அவலம் தொடர்பான அதட்டலான அனுதாபத்தை பெற்றுக்கொண்டார்.தேரர் கொடுக்கப்பட்ட அஜந்தாவின் அடிப்படையில் பேசுவதை போன்று ஏலவே சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மீளவும் சொல்லிக்கொள்ள முயன்றதையும் காண முடிந்தது. வில்பத்து காடழிப்பு தொடர்பில் அவர் பேசுவதற்கான காரணம் அங்கு முஸ்லீம்களின் மீள்குடியேற்றமே ,தவிர வேறில்லை. 

இருந்தும் அவர் ரிசாட் அமைச்சருடைய குடும்பத்தின் சொத்து விபரம் தொடர்பில் பேசிய போது அமைச்சர் நீங்கள் தேரராக இருக்கிறீர்கள் அரசியல் பிரமுகர் என்றால் என்று கூறுவதையும் காணமுடிந்தது. 

தேரர் காணிகளின் உறுதிப் பத்திரத்தை உயர்த்து காட்டி பெயர்களையும் குறிப்பிடும் போது செப்பின் பேக்குடன் வந்த குடும்பத்துக்கு இவ்வளவு காணிகளா? எனவும் வினாவினார்.அதன் போது அது நானில்லை மனைவி இல்லை எனவும் கூறினார். ஆனால் இது சகோதரங்களா? என்கின்ற கேள்விக்கு விடையில்லை. 

தேரர் சகோதரர் றுஸ்தி ஹபீப் சட்டத்தரணி SLTJ தலைவர் ராசிக்குடன் சம்பந்தப்படுத்தி ஏதோ கூற முற்பட்டதானது தனி இனவாத சிந்தனை யை விதைப்பதற்க்கு தேரர் தருணம் பார்த்து காத்திருந்தால் போல் இருந்தது.இறுதியாக குர்ஆனை தூக்கி இதிலே சத்தியம் செய்யும் படி அமைச்சரை அழைத்த போது அமைச்சர் காரணம் ஏதோ சொல்ல விவாத அரங்கு நிறைவானது .

இதில் தெளிவென்பதற்கப்பால் எமது முஸ்லீம் சகோதரர்கள் பாராளுமன்ற தேர்தலின் போது அமைச்சரின் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களே அதன் ஆதாரமாக தேரரின் கையிலே இருந்தது. அதுவே எம் சமுகத்திற்கெதிராக பேசுகிற தளம் ஒன்றில் ஆதாரமாக போய் சேர காரணமானது. நாமே ஆதாரத்துடன் சில விடயங்களில் எம்மவரை காட்டிக் கொடுத்திருக்கிறோம். 

ரிசாட் தனது களங்கத்தை துடைத்திருக்கிறாரா? அல்லது எங்கோ ஆள் திரட்டி குரலெழுப்பும் தேரரல்லாம் ஒரு இரவுக்குள் இனவாதிகளின் காதுகளுக்கு தன்னை ஒரு சூழலியல் காப்பாளன் எனும் வடிவில் முஸ்லீம் விரோத கருத்துக்களை சென்றடைய வைத்திருக்கின்றனர்.

நடு நிலை பேனும் எவரும் இனவாதம் தலை மேல் ஏறி நின்றாலும் சிந்திக்காமல் முடிவடுக்க போவதில்லை.ஆனந்ததேரர் ஞானசார தேரரின் கருத்துக்களுக்கு வலு சேர்க்கும் படி இனவாதத்தை மீண்டும் விதைப்பதற்க்கு எடுக்கின்ற முயற்சியா ?

சட்டரீதியாக சிக்கலுக்குள்ளாக விருக்கும் ஞானசாரவை காப்பதற்கான முயற்சியா?என சிந்திக்தோன்றுகிறது.சர்வதேசத்தால் உருவாக்கப்பட்ட ஞானசார தேரரை சர்வதேசம் காப்பாற்றியே ஆக வேண்டும். 

இனவாத சிந்தனை தோற்றுவிக்கப்டுகின்ற போதுதான் ஞானசாரர்களை காப்பாற்ற முடியும். அண்மையில் வாபஸ் பெறப்பட்ட சட்டமூலத்தையும் நினைவிற்கொள்க.

அரங்கின் வெளியே ரிசாட் அமைச்சரை தேசிய தலைவராக ஏற்றுக்கொண்ட சனங்கள் அமைச்சருக்கு புகழ் மாலை சூடுவதையும் தலைவருக்கு நிகர் யாருமில்லை என்பதையும் பறை சாட்டுவதையும் மற்றய தேசிய தலைமையுடைய பெருந்தகைகள் இனதுவசத்தை தோற்றுவிக்குமே விவாதம் தேவையில்லை என்பதாகவும் எங்களுடைய தலைவர் நிதானமாக முடிவெடுப்பார் என்றும் உலறுவதை காணமுடிகிறது.

நிதானமாக இருந்ததால்தான் கரையோரமாவட்டம், தென்கிழக்கு அலகு, முன்னர் சமாதான பேச்சுவார்த்தை யில் தனித்தரப்பு,சுனாமி வீட்டுத்திட்டம், வட்டமடு விவசாய நிலம், திருகோணமைலை மாவட்ட நில அபகரிப்பு வென்றெடுக்க முடிந்தது என்பதாகவும் எண்ணிக்கொள்கிறார்கள்.

ரிசாட் அமைச்சர் கொடுக்கின்ற குரல் அதன் எடுப்பு நியாயமானதாக இருப்பினும் அது யாருடன், எதற்காக, என்கிற கேள்விகளுக்கு பதில் இல்லை. இதிலே முஸ்லீம் அரசியலின் இன்னொரு உணர்வு நிலை ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்து வந்தான் என்கிற பாடலை விட ரிசாட் அமைச்சரின் இவ்வாறான செயற்பாடுகள் பாமர அரசியலின் ஆதரவற்ற சமுகத்திடம் சென்று விடுமோ என்கிற அச்சமும் ஒரு சாராருக்கு எழுகிறது.

மக்களின் முதுகுகளில் மீதெறி பயணம் செய்யும் அரசியல் வித்தகர்கள் இன்னும் பல தேரர்களையும் இன்னும் பல விவாத அரங்குகளையும் உருவாக்காமல் விடப்போவதில்லை. 

முஸ்லீகளின் அச்சமே முஸ்லீம் கட்சிகளின் அரசியலை வாழ வைக்கும் எனத் தெரிந்து கொண்ட தலைமைகள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -