பொத்துவில் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரின் பொறுப்பற்ற செயல் - நாம் பொத்துவில் அமைப்பு கண்டனம்

ரம்சான் மக்சூத்
பொத்துவில் - ஹிதாயாபுரம், ஆர் எம் நகர், புதுக்குடியிருப்பு, இன்ஸ்பெக்டர் ஏத்தம், ஹிஜ்ரா நகர் ,செங்காமம் , மயிலக்கா தோட்டம் ஆத்திமுனை போன்ற கிராமங்களில் கடந்த 09 மாதத்திற்கும் மேலாக குடி நீர் பிரச்சினை என்பது பாரிய சவாலாக இருக்கின்றது என்பது நிதர்சனமான உண்மை. 

இப் பிரதேசமக்களின் குடிநீர் பிரச்சினை ஆரம்பத்திலே தீர்த்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் கட்டுப்பாட்டில் வந்தநாள் முதல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நிருவாகத்திறன் இன்மையை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட மக்கள் 19-12-2015 அன்று கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

23-12-2015 அன்று, இப்போராட்டத்தின் போது பொத்துவில் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எம் எஸ் ஏ வாஸித்தும் அவரது குழுவினரும் இணைந்து கவனயீர்ப்பில் ஈடுபட்ட குழுவினருக்கு இடையூறு விளைவித்ததோடு மாத்திரமன்றி கடந்த அரசாங்கத்தின் பாணியில் அராஜக அரசியலை உட்படுத்தியதன் விளைவாக‌ போராட்டாத்தில் ஈடு பட்ட மக்கள் உளரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர்.

இவ்வாறு உடல் - உள ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்போதும் "நாம்பொத்துவில்" அமைப்பு துணை நிற்கும் என்பதோடு, அவர்களின் துயரத்தில் இருந்து மீள பிரார்த்தனை செய்வதுடன் தேவையான உதவிகளை செய்வதற்கும் தயாராகவே இருக்கின்றது என்பதை தெரிவித்து கொண்டு ,இந் நல்லாட்சி அரசிலே அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளருக்கும் அக் கட்சியின் குண்டர்களுக்கும் "நாம்பொத்துவில்" அமைப்பு வன்மையாக தனது கண்டனத்தை தெரிவிக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -